[X] Close

'அற்பமானது' எனக் கூறி ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்த பொதுநல மனுவை 2015-ல் நிராகரித்த உச்ச நீதிமன்றம்


2015

  • kamadenu
  • Posted: 01 May, 2019 11:56 am
  • அ+ அ-

-கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

கடந்த 2015-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநல மனுவில், ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளது தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்று தொடர்ந்த மனு 'அற்பமானது' என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

சம்பந்தமில்லாத விசாரணையைத் தொடங்குவதற்கு வழக்கறிஞர் முயற்சிக்கிறார் என்று நீதிபதிகள் கண்டித்திருந்தது கவனிக்கத்தக்கது.

இந்த சூழலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தை ஏற்று, உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி 14 நாட்களில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஹெச்.எல்.தத்து, நீதிபதிகள் அமித்தவ ராய் ஆகியோர் கொண்ட அமர்வில் வழக்கறிஞர் எம்எல்.சர்மா ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், ''ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். அவர் இங்கிலாந்து நாட்டு நிறுவனம் ஒன்றில் தாக்கல் செய்த ஆண்டு ரிட்டனில், தான் இங்கிலாந்து குடியுரிமை பெற்றதை தெரிவித்துள்ளார் .ஆதலால் இது குறித்து சிபிஐ விசாரணை தேவை'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, "நீங்கள் தாக்கல் செய்த மனு அற்பமானது. சம்பந்தமில்லாத விசாரணைகளைத் தொடங்குவதற்காக வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். பொதுநல மனு என்பது தனி மனிதர்களுக்கு எதிராகவோ, அல்லது அமைப்புகளுக்கு எதிராகவோ இருக்கக் கூடாது, நல்ல நிர்வாகத்தின் மூலம் மனிதர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் ஊடகமாக இருக்க வேண்டும். நீங்கள் தாக்கல் செய்த மனுவுக்கான ஆதாரங்கள், மனுவில் இணைந்துள்ள ஆவணங்களின் மூலத்தைக் கேள்விக்குள்ளாகுகிறது. பொதுநல மனு சிறிது உணர்வுபூர்வமாக மக்களை துன்பத்தில் இருந்து மீட்பதாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்து நிராகரித்தனர்.

ஆனால், அதற்கு வழக்கறிஞர் சர்மா இந்த மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு தலைமை நீதிபதி ஹெச்எல் தத்து, "நிறுத்துங்கள், நான் இன்னும் 2 நாட்கள் மட்டுமே பணியில் இருப்பேன். என்னைத் தேவையில்லாமல் மிகப்பெரிய அபராதத்தை உங்கள் மீது விதிக்கத் தூண்டாதீர்கள்" எனத் தெரிவித்தார். டிசம்பர் 2-ம் தேதி தலைமை நீதிபதி ஹெச்எல் தத்து ஓய்வு பெற்றார்.

வழக்கறிஞர் சர்மா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் போலவே, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது?

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ராகுல் காந்தி குறித்து கடிதம் அனுப்பி இருந்தார். அதில் " இங்கிலாந்தைச் சேர்ந்த பேக்காப்ஸ் என்ற நிறுவனம் ஒன்றில் ராகுல் காந்தி 2003-ம் ஆண்டில் இருந்து நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும், செயலாளராவும் இருந்து வருகறார்.

 கடந்த 2005 அக்டோபர் 10 மற்றும் 2006 அக்டோபர் 31-ம் தேதி ஆண்டு ரிட்டர்ன் தாக்கல் செய்தபோது, தன்னுடைய பிறந்தநாள் 1970, ஜூன் 19 என்று குறிப்பிட்டிருந்தார்.

 தன்னை இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த நிறுவனம், ஹேம்ஸ்பயரில் உள்ள வின்ஞ்செஸ்டர், 51, சவுத்கேட் பகுதியில் இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார். ஆதலால் ராகுல் காந்தியின் உண்மையான நிலை குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close