[X] Close

மோடியை எதிர்க்கும் ஹரியாணா மக்கள்: கேஜ்ரிவால் கருத்து


  • kamadenu
  • Posted: 01 May, 2019 08:41 am
  • அ+ அ-

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். இதுகுறித்து டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், ‘‘கடந்த தேர்தலின்போதும் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து ஹரியாணாவைச் சேர்ந்தவர் (தன்னைக் குறிப்பிடுகிறார்) போட்டியிட்டார். இந்தத் தேர்தலிலும் ஹரியாணாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார். ஹரியாணா மக்கள் பிரதமர் மோடியை எதிர்க்கவே விரும்புகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close