[X] Close

பகுஜன் - சமாஜ்வாதி கூட்டணி மே 23-ல் காலாவதியாகும்- பிஹார் மாநிலத்தில் மோடி பிரச்சாரம்


23

  • kamadenu
  • Posted: 01 May, 2019 08:42 am
  • அ+ அ-

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி வரும் 23-ம் தேதி காலாவதியாகிவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிஹாரின் முஷாபர்நகர், உத்தர பிரதேசத்தின் பஹராய்ச், பாராபங்கி நகரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசியது. மீதமுள்ள 3 கட்ட தேர்தல்கள், எங்கள் கூட்டணியின் அமோக வெற்றிக்கு வழிவகுக்கும். எதிர்க்கட்சிகள் தோல்வியைத் தழுவுவது உறுதி.

பிஹாரில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளது. மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. ஒருவேளை பிஹாரில் எதிர்க்கட்சிகள் வலுவடைந்தால் பெண்கள் வெளியில் நடமாட முடியாது. வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்படும். சட்டம், ஒழுங்கு மீண்டும் மோசமாகிவிடும்.

மக்களவைத் தேர்தலையொட்டி உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இது சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த கூட்டணி வரும் மே 23-ம் தேதி காலாவதியாகிவிடும். அதன்பின் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பரஸ்பரம் சண்டையிட்டு சட்டையை கிழித்துக் கொள்வார்கள்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களுக்காக ஆட்சி நடத்துகிறது. அம்பேத்கர் போன்ற உயரிய தலைவர்களின் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக பாடுபடுகிறது. விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக சிறப்பு நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துகிறது.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றால் உலகளாவிய அளவில் அதிக சக்திவாய்ந்த வல்லரசாக இந்தியா உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close