[X] Close

லாலுவால் பாஜகவுக்கு சாதகம்: சுஷில்குமார் மோடி


  • kamadenu
  • Posted: 01 May, 2019 08:39 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

பிஹாரில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 19 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் கள நிலவரம் தொடர்பாக பிஹார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளும், பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான மாநில அரசின் செயல்பாடுகளும் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளன. எனவே, இந்த தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 38 முதல் 39 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் கைப்பற்றும்.எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கு எதை கூறி பிரச்சாரம் செய்வது என்றே தெரியவில்லை. சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவை ஜாமீனில் வெளிக்கொண்டு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட வைக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. அவ்வாறு லாலு பிரச்சாரம் மேற்கொண்டால், அது பாஜக கூட்டணிக்கே சாதகமாக அமையும்.

இவ்வாறு சுஷில்குமார் மோடி கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close