[X] Close

'மோடியின் கட்டுக்கதை': ராகுல் குடியுரிமை விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி சாடல்


  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 14:03 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரா என்பது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தள்ள நோட்டீஸ் என்பது மக்களின் கவனத்தை திசைதிருப்ப மோடியின் கட்டுக்கதை என்று காங்கிரஸ்  கட்சி சாடியுள்ளது.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இங்கிலாந்தைச் சேர்ந்த பேக்காப்ஸ் என்ற நிறுவனம் ஒன்றில் ராகுல் காந்தி 2003ம் ஆண்டில் இருந்து நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும், செயலாளராவும் இருந்து வருகறார்.

 கடந்த 2005, அக்டோபர் 10 மற்றும் 2006, அக்டோபர் 31-ம் தேதி ஆண்டு ரிட்டன் தாக்கல் செய்தபோது, தன்னுடைய பிறந்தநாள் 1970, ஜூன் 19 " என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தை ஏற்று, மத்திய உள்துறை அமைச்சகம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி, 14 நாட்களில் உண்மையான நிலை என்ன என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ராகுல் காந்தி பிறப்பால் இந்தியக் குடிமகன் இந்த உலகிற்கே தெரியும். ஆனால், அவர் இங்கிலாந்து குடியுரிமை உள்ளவர் என்று பாஜக கூறுகிறது.

நாட்டில் நிலவும் வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை, கறுப்புப்பணம் ஆகியவற்றுக்கு கேள்வி எழுப்பினால் மோடியிடம் பதில் இல்லை. மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில், இதுபோன்ற போலிக் கதைகளை உருவாக்கி, அரசு மூலம் மோடி நோட்டீஸ் அனுப்புகிறார் " எனத் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close