[X] Close

இங்கிலாந்து குடியுரிமை விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி புகார்; ராகுல் காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ்


  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 12:41 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

இங்கிலாந்து நாட்டில் குடியுரிமை பெற்றவர் ராகுல் காந்தி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரையடுத்து, உண்மையான நிலையை தெளிவுபடுத்தக்க கோரி காங்கிரஸ் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ராகுல் காந்தி குறித்து கடிதம் அனுப்பி இருந்தார்.

அதில் " இங்கிலாந்தைச் சேர்ந்த பேக்காப்ஸ் என்ற நிறுவனம் ஒன்றில் ராகுல் காந்தி 2003ம் ஆண்டில் இருந்து நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும், செயலாளராவும் இருந்து வருகறார்.

 கடந்த 2005, அக்டோபர் 10 மற்றும் 2006, அக்டோபர் 31-ம் தேதி ஆண்டு ரிட்டன் தாக்கல் செய்தபோது, தன்னுடைய பிறந்தநாள் 1970, ஜூன் 19 என்று குறிப்பிட்டிருந்தார்.

 தன்னை இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த நிறுவனம், ஹேம்ஸ்பயரில் உள்ள வின்ஞ்செஸ்டர், 51, சவுத்கேட் பகுதியில் இருக்கிறது "  என்று தெரிவித்திருந்தார். ஆதலால் ராகுல் காந்தியின் உண்மையான நிலை குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் பி.சி. ஜோஷி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.  அதுதொடர்பாக அவர் கூறுகையில், " பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த கடிதத்தின் அடிப்படையில் இங்கிலாந்து நிறுவனமான பேக்காப்ஸில் ஆண்டு ரிட்டன் தாக்கல் செய்ததில் ராகுல் தன்னை இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் எனத் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து  அடுத்த 14 நாட்களுக்குள் ராகுல் காந்தி உண்மையான நிலவரம் என்ன என்பதை விளக்கக் கோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close