[X] Close

'மம்தா கட்சியின் 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள், தேர்தல் முடியட்டும்': பிரதமர் மோடி சூசகம்


40

  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 16:37 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 40 பேர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் தேர்தல் முடிந்தால், அவர்கள் கட்சியிலிருந்து பிரிந்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.

தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதை சூசகமாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

மேற்கு வங்க மாநிலம், ஸ்ரீராம்பூரில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றபெற்றவுடன், அவர்கள் கட்சியில் இருந்து விலகிவிடுவார்கள். அரசியல் களத்தில் மம்தா சறுக்கப்போகிறார்.

முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய உறவினர்களை வளர்த்துவிடவே அதிகமாக முக்கியத்துவம் அளிக்கிறார். தன்னுடைய உறவினர்களை அரசியல்வாரிசுகளாக கொண்டு வர முயல்கிறார்.

மக்களவைத் தேர்தலில் சில இடங்களில் வென்று டெல்லியில் முதல்வர் பதவிக்கு மம்தா பானர்ஜி ஆசைப்படுகிறார்.நான் சொல்கிறேன். டெல்லி உங்களுக்கு மிக தொலைவில்  இருக்கிறது. உங்களால் டெல்லியை அடையவே முடியாது. மம்தா பானர்ஜிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் அடிக்கடி அவருக்கு கோபம் வருகிறது.

எதிர்க்கட்சிகள் ஒருநேரத்தில் என்னை குற்றம்சாட்டி வந்தன. இப்போது தோல்வி பயத்தால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குற்றம்சாட்டுகிறார்கள். இந்த தேர்தலில் தோல்வி கிடைத்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகிறார்கள்.

மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியினர் மக்களை தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவிடாமல் குண்டர்களைக் கொண்டு தடுக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close