[X] Close

மேனகா காந்தியின் 'ஏபிசிடி' பேச்சு: தேர்தல் ஆணையம் எச்சரிக்கையுடன், கடும் கண்டனம்


  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 15:33 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

மத்திய அமைச்சர் மேனகா காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏபிசிடி என்று கிராமங்களை தரம்பிரித்து பேசியப் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கையுடன், கூடிய கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் அருகே சர்கோடா கிராமத்தில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடந்த 14-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில், " ஒவ்வொரு முறையும் பிலிபிட்  பகுதியில் வெற்றி பெற்று வருகிறோம். ஒரு கிராமத்துக்கு அதிகமாகவும், சில கிராமத்துக்கு குறைவாகவும் அளவுகோல் வைத்து நாங்கள் பணியாற்றுகிறோமா?

நாங்கள் கிராமங்களை ஏபிசிடி என்று வகைப்படுத்தியுள்ளோம். எந்த கிராமத்தில் இருந்து 80 சதவீத வாக்குகள் பெற்றோமோ அதை ஏ என்றும், 60 சதவீதம் வாக்களித்த கிராமத்தை பி என்றும, 50 சதவீதம் வாக்களித்த கிராமத்தை சி என்றும், 50 சதவீதத்துக்கு குறைவாக வாக்குகள் அளித்த கிராமத்தை டி என்றும் வகைப்படுத்தியுள்ளோம்.

ஏ  பிரிவு கிராமங்களில் எல்லாம் வளர்ச்சிப்பணிகள் முதலில் நடக்கும். அதன்பின் பி வகை கிராமங்களுக்கு நடக்கும். அதன்பின் சி வகை கிராமங்களுக்கும், கடைசியாக டி கிராமங்களுக்கும் நடக்கும் " எனப் பேசி இருந்தார்.

மேனகா காந்தியின் இந்தபேச்சுக்கு தேர்தல் ஆணையம் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் பதிவு செய்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் கண்டனத்துக்கு 2-வது முறையாக மேனகா காந்தி ஆளாகியுள்ளார்.

 ஏற்கனவே இதுபோல் இருமதத்தினருக்கும் இடையே மோதல் உருவாகும்வகையில் பேசியதால், 48 மணிநேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டார். இந்நிலையில், இப்போது எச்சரிக்கையுடன், கூடிய கண்டனத்தை மேனகா பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தவறான செயல் என்றும் தெரிவித்துள்ளது

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close