[X] Close

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் முன்னாள் ராணுவ அதிகாரிகள்: 7 பேர் பாஜக.வில் இணைந்தனர்


7

  • kamadenu
  • Posted: 28 Apr, 2019 09:20 am
  • அ+ அ-

ஐந்து லெப்டினன்ட் ஜெனரல்கள் உட்பட முன்னாள் ராணுவ அதிகாரிகள் 7 பேர் நேற்று பாஜக.வில் இணைந்தனர்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், ஓய்வு பெற்ற மூத்த முன்னாள் அதிகாரிகள் 7 பேர் பாஜக.வில் இணைந்தனர்.

முன்னாள் ராணுவ துணை தளபதிகள் லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.எஸ்.யாதவ், லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே.பட்யால் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல்கள் ஆர்.என்.சிங் (ராணுவ புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றியவர்), சுனித் குமார்(தகவல் தொடர்பு சேவை இயக்குநர் ஜெனரல்), நிதின் கோலி (ராணுவ தலைமையக தலைமை சிக்னல் பொறுப்பாளர்) ஆகியோர் பாஜக.வில் இணைந்தனர்.

தவிர கலோனல் ஆர்.கே.திரிபாதி (ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல்),விங் கமாண்டர் நவ்நீத் மேகன் (விமானப் படை மருத்துவர்) ஆகியோரும் பாஜக.வில் சேர்ந்தனர்.

முன்னாள் ராணுவ அதிகாரிகள் பாஜக.வில் இணைந்தது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘‘ராணுவத்தில் மிகப்பெரிய பதவிகளை வகித்து பலபதக்கங்கள் வென்ற முன்னாள் அதிகாரிகள் பாஜக.வில் இணைந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களை கட்சியில் வரவேற்கிறேன். இவர்களால் பாஜக.வுக்கு பயன் கிடைக்கும். பாதுகாப்புக் கொள்கைகளை வகுக்க அவர்களுடைய வழிகாட்டுதல்கள் மிப்பெரிய உதவியாக இருக்கும்’’ என்றார்.

லெப்டினன்ட் ஜெனரல் யாதவ் கூறும்போது, ‘‘நமது நாடு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. வளர்ச்சியை நோக்கி நமது நாடு வேகமாக செல்கிறது என்று நம்புகிறேன். திறமையுள்ளவர்களின் கைகளில் நமது நாட்டின் பாதுகாப்பு உள்ளது.

நாங்கள் ஓய்வுதான் பெற்றிருக்கிறோம், ஓய்ந்துவிடவில்லை’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close