[X] Close

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் துயரங்கள் தீர்க்கப்படும்- ராகுல் காந்தி உறுதி


  • kamadenu
  • Posted: 27 Apr, 2019 08:00 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ்- ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமஸ்திபூரில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

கடந்த தேர்தலின்போது பாஜக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற் றப்படவில்லை. பாஜகவின் வாக் குறுதிகள் பொய்யானவை என்று நிரூபணமாகி உள்ளது. வெளி நாடுகளில் இருந்து கருப்புப் பணம் மீட்கப்பட்டு பொதுமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக் கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அது நிறைவேற்றப்பட வில்லை.

பாஜக ஆட்சியில் வேலையில் லாத் திண்டாட்டம் அதிகரித்துள் ளது. கடன் சுமையால் விவசாயி கள் சிரமப்படுகின்றனர். விவசாய விளைபொருட்களுக்கு நியாய மான விலை கிடைப்பதில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் துயரங்கள் தீர்க்கப் படும். ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் வகையில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம். இதன் மூலம் வறுமை ஒழியும். இத்திட்டம் வறுமை மீது காங்கிரஸ் நடத்தும் துல்லியத் தாக்குதல். ஏழைகள், விவசாயிகள் நலனில் காங்கிரஸ் அக்கறை கொண்டுள்ளது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close