[X] Close

எதிர்க்கட்சி தலைவர்களால் நாட்டை பாதுகாக்க முடியாது: அமித்ஷா கருத்து


  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 08:20 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

எதிர்க்கட்சித் தலைவர்களால் நாட்டை பாதுகாக்க முடியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம், காஜிப்பூரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

பாலகோட் விமானப்படை தாக்குதலால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவர்களால் நாட்டை பாதுகாப்புடன் வைத்திருக்க முடியாது. பாலகோட் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு மாயாவதி, அகிலேஷ், ராகுல் காந்தி அலுவலகங்களில் துக்கம் அனுசரிப்பது போன்ற சூழ்நிலை இருந்தது. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு இவர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் என்ன இவர்களின் உறவினர்களா?

நாட்டின் பாதுகாப்பை பாஜக சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் வந்தால், இந்தியாவில் இருந்து வெடிகுண்டுகள் அனுப்பி வைக்கப்படும். சிலர் செங்கல்லை வீசினால் அவர்கள் மீது பாறைகள் வீசப்படும். தேசத்துரோக சட்டம் நீக்கப்படும் என்ற காங்கிரஸ் கூறுகிறது. இதன் மூலம் நாட்டுக்கு எதிராக முழக்கம் எழுப்புவோரை சிறையில் அடைக்க முடியாது.

இவ்வாறு அமித்ஷா பேசினார்

காஜிப்பூரில் தற்போதைய எம்.பி.யும் மத்திய அமைச்சருமான மனோஜ் சின்ஹா மீண்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close