[X] Close

கர்நாடக அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி?- காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் கண்டனம்


  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 08:15 am
  • அ+ அ-

-இரா.வினோத்

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 104, காங்கிரஸுக்கு 80, மஜதவுக்கு 37 இடங்கள் கிடைத்தன. ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால் தனிப்பெரும் கட்சியான பாஜக, எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்தது. பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு எடியூரப்பா அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் (மஜத) கூட்டணி ஆட்சி அமைத்தன. மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். வருகிற மே மாதத்துடன் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. அமைச்சரவையில் துறைகள் பங்கீடு, அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ், மஜத இடையே மோதல் ஏற்பட்டது. அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதேவேளையில் காங்கிரஸ் – மஜத ஆட்சியை கவிழ்க்க பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா முயன்று வருகிறார். ஆபரேஷன் தாமரை மூலம் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேரை பாஜகவுக்கு இழுக்க முயற்சித்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸாரிடம் எடியூரப்பா குதிரை பேரம் நடத்திய ஆடியோ மற்றும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எடியூரப்பா மீண்டும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசை கவிழ்க்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்று மத்தியில் ஆட்சி அமைத்தால், காங்கிரஸில் இருந்து எளிதாக எம்எல்ஏக்களை இழுத்து கர்நாடக அரசை கவிழ்த்து விடலாம் என வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களிடம் எடியூரப்பா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மே 23-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பி.நாகேந்திரா, மகேஷ் குமட்டஹள்ளி, ரமேஷ் ஜார்கிஹோளி, பி.சி.பட்டேல், ஜே.என்.கணேஷ், பீம்நாயக் உள்ளிட்டோர் பாஜகவில் இணைய சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

தக்க பதிலடி

இதுகுறித்து கர்நாடக துணை முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வர் கூறுகையில், “அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டுள்ளது. எனவே இந்த ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பாஜகவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது. கடந்த 9 மாதங்களாக எங்கள் ஆட்சி கவிழும் என எடியூரப்பா கூறி வந்தார். அவரால் ஒன்றும் செய்யவில்லை. அதனையும் மீறி, சதி வேலைகளில் ஈடுபட்டால் பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close