[X] Close

இலங்கை குண்டுவெடிப்பில் பலியான மஜத நிர்வாகிகள் 7 பேரின் உடல்கள் சொந்த ஊரில் தகனம்


7

  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 08:23 am
  • அ+ அ-

-இரா.வினோத்

கர்நாடகாவில் கடந்த 18-ம் தேதி முதல்கட்ட மக்களவைத் தேர்தல் முடிந்ததால் மஜத நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் ஓய்வெடுப்பதற்காக கடந்த 19-ம் தேதி இலங்கைக்கு சென்றனர்.

இவர்களில் பெங்களூருவை சேர்ந்த ஹனுமந்த் ராயப்பா, ரங்கப்பா, புருஷோத்தம், நாகராஜ ரெட்டி மற்றும் சிக்பள்ளாப்பூரை சேர்ந்த சுப்ரமண்யா, கேசவராஜ், சிவகுமார் ஆகிய 7 பேர் கொழும்பில் உள்ள ஷாங்கிரி லா நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஷாங்கிரி லா நட்சத்திர விடுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 15-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதில் மஜத நிர்வாகிகள் ஹனுமந்த் ராயப்பா, ரங்கப்பா, புருஷோத்தம், நாகராஜ ரெட்டி, சுப்ரமண்யா, கேசவராஜ், சிவகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். இலங்கை குண்டுவெடிப்பில் கர்நாடகாவை சேர்ந்த மேலும் 3 பேர் பலியானது தெரியவந்தது. மஜத எம்எல்ஏக்கள் ஸ்ரீனிவாச மூர்த்தி,விஸ்வநாத் ஆகியோர் இலங்கை சென்று இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் 10 பேரின் உடல்களையும் விமானம் மூலம் நேற்று பெங்களூரு கொண்டுவந்தனர்.

பின்னர் அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close