[X] Close

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எதிரான கைது உத்தரவுக்கு நீதிமன்றம் தடை


  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 08:11 am
  • அ+ அ-

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வரமுடியாத கைது உத்தரவுக்கு டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2013-ல் சுரேந்தர் சர்மா என்ற வழக்கறிஞர் தொடர்ந்த அவதூறு வழக்கில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர்களுக்கு எதிராக நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து கேஜ்ரிவால், சிசோடியா ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கேஜ்ரிவால் வழக்கறிஞர், பின்னர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து இதனை மறுநாள் விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் அவதூறு வழக்கில் மூவருக்கும் எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது உத்தரவுக்கு நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.

கடந்த 2013-ல் நடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வழக்கறிஞர் சுரேந்தர் சர்மாவுக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு, பின்னர் கடைசி நேரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவால், சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக சர்மா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close