[X] Close

கமல்நாத்தின் சுவிட்சர்லாந்து பயணத்துக்கு ரூ.1.58 கோடி அரசு செலவு


1-58

  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 08:09 am
  • அ+ அ-

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் சுவிட்சர்லாந்து பயணத்துக்காக மாநில அரசு ரூ.1.58 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

உலக பொருளாதார மாநாடு கடந்த ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸில் நடந்தது. இதில் மத்திய பிரதேச அரசின் சார்பில் முதல்வர் கமல்நாத் கலந்து கொண்டார். அவருடன் மாநில அரசின் தலைமைச் செயலாளர் எஸ்.ஆர். மொஹந்தி உள்ளிட்ட 3 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் பயணத்துக்கான செலவு குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊழலுக்கு எதிரான சமூக செயற்பாட்டாளரான அஜய் துபே என்பவர் கோரியிருந்தார். அவருக்கு கிடைத்த பதில் மூலம் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் சுவிட்சர்லாந்து பயணதுக்காக மாநில அரசு ரூ.1.58 கோடி செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. விமான டிக்கெட்டுகள் 30 லட்சம் ரூபாய்க்கும் ஓட்டலில் தங்குவதற்கு ரூ.45 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தை கமல்நாத் மேற்கொண்டிருக்காவிட்டால் மத்தியப் பிரதேசம் பல முதலீட்டு வாய்ப்புகளை இழந்திருக்கும் என்று மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close