[X] Close

என்னுடைய பல்வேறு வெளிநாட்டு பயணங்களால்தான் இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் ஒப்புக் கொண்டன- எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதில்


  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 07:17 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

‘‘நான் பல்வேறு வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களால்தான், இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் ஒப்புக் கொண்டன’’ என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறினார்.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மூலம்முக்கிய ஒப்பந்தங்களை உருவாக்கினார். இந்நிலையில், பிரதமர்மோடி இந்தியாவில் இருப்பதில்லை. அவர் விமானத்திலேயே சுற்றி வருகிறார் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் பிர்பும் பகுதியில் பாஜக.வுக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் பேசியதாவது:கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் குரல் உலக அரங்கில் ஒலிக்கவில்லை. ஆனால், தற்போது இந்தியாவின் குரலுக்கு மதிப்புள்ளது. அதற்குக் காரணம் பல்வேறு நாடுகளுக்கு நான் மேற்கொண்ட பயணம்தான். இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் ஒப்புக் கொண்டதற்கு என்னுடைய வெளிநாட்டு பயணங்கள்தான் காரணம்.

ஆனால், ‘தேநீர் விற்றவர் கடந்த 5 ஆண்டுகளாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதிலேயே பிஸியாக இருந்தார்’ என்று மேற்குவங்க தீதி (முதல்வர் மம்தா பானர்ஜி) விமர்சிக்கிறார். மக்களவைத் தேர்தலில் 20 முதல் 25 தொகுதிகளில் போட்டியிடும் கட்சித் தலைவர்கள் கூட, இந்த நாட்டின் பிரதமராகிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

இந்த நேரத்தில் மக்களவைத் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் தேர்தல் நியாயமாக நடக்கிறதே என்று தேர்தல் ஆணையம் மீது தீதி கோபமாக இருக்கிறார்.

தற்போது 3 கட்ட வாக்குப்பதிவு நடந்த பிறகு ‘மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் சூரியன்மறைய போகிறது’ என்ற தகவல்கள் தெளிவாக தெரிவிக்கின்றன. தீதியிடம் குண்டர்கள் பலம் இருக்கிறது என்றால், எங்களிடம் ஜனநாயக பலம் இருக்கிறது.

இவ்வாறு மோடி பேசினார்.

வேறு வழியில்லை..

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா பகுதியில் நேற்று பாஜக பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:மக்களவைத் தேர்தலில் 3 கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் தாங்கள் சரியாகபணியாற்றவில்லை என்ற உண்மையை ‘மகா கூட்டணி’க்காரர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். தங்கள் தோல்வியை மறைப்பதற்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். வேறு வழியே இல்லை. தங்கள் தோல்வியை அவர்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது’ என்று மீண்டும் பழைய புகாரையே எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். சரியாக வேலை செய்யாத போது, அதற்கு ஏதாவது காரணம் கூறி சமாளிக்கும் குழந்தையைப் போல எதிர்க்கட்சியின் பேசுகின்றனர். தங்கள் கோபத்தை எல்லாம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது எதிர்க்கட்சியினர் திருப்புகின்றனர்.

இராக்கில் 46 செவிலியர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். நமது மகள்களை மீட்டு வந்தோம். கொல்கத்தாவைச் சேர்ந்த ஜூடியத் டிசோசா ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டார். அவரை நாம் மீட்டோம். நமது மகள்கள் எங்கிருந்தாலும் அவர்களை பாதுகாக்கும் பணிகளை இந்த காவலாளி (மோடி) செய்து வருகிறார். மதத்தால், ஜாதியால் நான் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இவ்வாறு மோடி பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close