[X] Close

நாட்டின் பாதுகாப்பில் காங்கிரஸுக்கு அக்கறை இல்லை- பிரதமர் மோடி குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 24 Apr, 2019 08:09 am
  • அ+ அ-

நாட்டின் பாதுகாப்பில் காங்கிரஸுக்கு அக்கறை கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒடிசா மாநிலம், பலசூர், மேற்குவங்கத்தின் அசன்சோலில் நேற்று நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஒடிசாவின் பலசூரில் இருந்து செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதன்மூலம் வரலாற்றில் பலசூர் இடம்பிடித்துள்ளது. நிலம், நீர், வான்வெளியில் இந்தியா வல்லரசாக உருவெடுத்துள்ளது.

கடந்த கால காங்கிரஸ் அரசுகள், நாட்டின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் குறிப்பிட்ட குடும்பத்தின் நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடியது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சோகத்தில் மூழ்கின.

மொபைல் போன் முதல் ஏவுகணைகள் வரை அனைத்தும் விண்வெளியில் இருந்து கட்டுப்படுத்தப்படுகின்றன. இன்றைய காலத்தில் விண்வெளி பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தத் துறையை கடந்த கால அரசுகள் கண்டு கொள்ளவில்லை.

ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் அரசில் ஊழல் அதிகரித்து வருகிறது. இனிமேலும் ஆட்சியில் நீடிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள முதல்வர் நவீன் பட்நாயக் அரசு, பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அரசுக்கு வாக்களிக்க ஒடிசா மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

மேற்குவங்கத்தில் ஆட்சி செய்யும் திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊழலில் திளைத்து வருகிறது. காங்கிரஸுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று ஊழலில் சவால் விடுத்து வருகிறது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் திரிணமூல் கூட்டங்களுக்கு மக்கள் செல்வதில்லை. எனவே கூட்டத்தைக் கூட்ட அந்த கட்சி வெளிநாடுகளில் இருந்து நடிகர்களை அழைத்து வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close