[X] Close
 

டீச்சர், பெயரைக் கூப்பிட்டால் 'யெஸ் மிஸ்' அல்ல 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும்: ம.பி. அரசு உத்தரவு


answer-roll-call-with-jai-hind-madhya-pradesh-government-to-students

  • பாரதி
  • Posted: 16 May, 2018 14:17 pm
  • அ+ அ-

அரசுப் பள்ளிகளில் டீச்சர் வருகைப் பதிவை சரி செய்யும்போது மாணவர்களின் பெயரைக் கூறி அழைத்தால் மாணவர்கள் பதிலுக்கு யெஸ் மிஸ்  / யெஸ் சார் சொல்லக்கூடாது. அதற்குப் பதிலாக ஜெய் ஹிந்த் சொல்ல வேண்டும் என மத்தியப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்கள் மத்தியில் தேச பக்தியை வளர்ப்பதற்கான முயற்சியே இது என அரசு விளக்கமும் அளித்துள்ளது.
முன்னதாக 2017 நவம்பரில் மத்தியப் பிரதேச பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் விஜய் ஷா, "வருகைப் பதிவு சரி பார்க்கும் ஆசிரியரின் குரலுக்கு யெஸ் மிஸ்  / யெஸ் சார் என்று கூறுவது தேச பக்தியை வளர்ப்பதாக இல்லை" எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், மாநிலம் முழுவதும் 1.22 லட்சம் அரசுப் பள்ளிகளில் ஜெய் ஹிந்த் சொல்வது நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி கடந்த அக்டோபரில் சட்னா மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் இந்த முறை பரிச்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது அந்த நடைமுறை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பாஜக அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. "தேசிய உணர்வை தேச பக்தியை கட்டாயமாக யாரிடமும் புகுத்த முடியாது. அரசாங்கம் முதலில் பாடத்தின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close