[X] Close

இலங்கையில் குண்டுவெடிப்பு: சந்திரபாபு கண்டனம்


  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 10:46 am
  • அ+ அ-

ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளுடன் மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பது மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசித்தார். எந்தவொரு சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டாலும், உடனடியாக மக்கள் போலீஸாரை அணுக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மிகுந்த வேதனை அளிக்கிறது. கடும் கண்டனத்துக்கு உரியது.

இதுபோன்ற தீவிரவாதச் செயல்களை மனிதாபிமான உணர்வுடன் அனைவரும் ஒட்டுமொத்தமாக கண்டிக்க வேண்டும். இதில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close