[X] Close

‘பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படம்: தேர்தல் ஆணையம் அறிக்கை


  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 10:34 am
  • அ+ அ-

‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்தை திரையிடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ‘பி.எம்.நரேந்திர மோடி’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியாக நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியாவதாக இருந்தது. தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தை வெளியிடுவது நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் கடந்த 10-ம் தேதி தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பாளர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்தை தேர்தல் ஆணையம் பார்த்துவிட்டு படத்தை வெளியிடலாமா? என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும் இதுபற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, படத்தை பார்த்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ‘சீல்’ வைக்கப்பட்ட கவரில் தங்கள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர். அறிக்கையின் நகலை படத் தயாரிப்பாளருக்கு வழங்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக 26-ம் தேதி விசாரணை நடக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close