பங்குச் சந்தை உச்சம்: 80 ஆயிரம் புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்


மும்பை: முதன்முறையாக சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 80,000 புள்ளிகளைத் தொட்டது.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 545 புள்ளிகள் உயர்ந்து 79,986 ஆகவும், நிஃப்டி 162 புள்ளிகள் உயர்ந்து 24,286 ஆகவும் நிலைகொண்டன. சதவீத அளவில் சென்செக்ஸ் 0.69%, நிஃப்டி 0.67% ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் 3.74%, அதானி போர்ட்ஸ் 2.43%, கோடக் மஹிந்திரா 2.32%, ஹெச்டிஎஃப்சி 2.20%, ஆக்ஸிஸ் பேங்க் 2.12% என்ற அளவில் ஏற்றம் கண்டன.

அதேசமயம், டிசிஎஸ், டைட்டன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்டவை சரிவைச் சந்தித்தன. கடந்த ஜூன் 25-ம் தேதி சென்செக்ஸ் முதன்முறையாக 78 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் 27-ம் தேதி 79 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில் தற்போது 80 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி3-வது முறையாக கடந்த ஜூன் 9-ம் தேதி ஆட்சிஅமைத்தது. அப்போது முதல் பங்குச் சந்தையில்ஏற்றம் காணப்பட்டு வருகிறது. ஜூன் 10-ம் தேதிசென்செக்ஸ் 76,490 ஆக இருந்தது. இந்நிலையில், கடந்த 3 வாரங்களில் சென்செக்ஸ் 3,500புள்ளிகள் உயர்ந்துள்ளன. கடந்த ஜூன் மாதத்தில்சென்செக்ஸ் 7.14% உயர்வு கண்டுள்ளது