[X] Close

பாஜகவுக்கு தோல்வி பயம்: பகுஜன் தலைவர் மாயாவதி கருத்து


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 10:37 am
  • அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உத்தரபிரதேசத்தின் 22 கோடி மக்கள் தன்னை பிரதமராக்கி உள்ளனர் என்று மோடி தெரிவித்தார். ஆனால், உ.பி. மக்களுக்கு அவர் துரோகம் செய்துவிட்டார். எங்களுக்கு ஏன் துரோகம் செய்தீர்கள் என்று உ.பி. மக்கள் பிரதமர் மோடியை கேட்கின்றனர்.

மக்களவைத் தேர்தலில் பிரதமர் பதவியில் இருந்து மோடியை அகற்ற மக்கள் தயாராக உள்ளனர். உ.பி. மக்களின் குரலாக பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி- ஆர்எல்டி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த மெகா கூட்டணி நாடு முழுவதும் மக்களிடம் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கூட்டணியால் தோல்வி பயம் காரணமாக பாஜக விரக்தி அடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் மாயாவதி கூறியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close