[X] Close

பிரதமர் மோடிக்காக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரச்சாரம்


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 10:26 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலையொட்டி, குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்காக வெளிநாடு வாழ் இந்தியர்கள் சுமார் 1,000 பேர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து, உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து பிரச்சாரம் மேற்கொள்ள குஜராத் வந்துள்ளனர்.

பல்வேறு தொகுதிகளில் முகாமிட்டுள்ள அவர்கள், பாஜகவின் சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.

அத்துடன், கிராமங்கள்தோறும் வீடு வீடாக சென்று பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியிருக்கும் திட்டங்கள் தொடர்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close