[X] Close

தோல்வி பயத்தில் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி விமர்சனம்


  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 09:59 am
  • அ+ அ-

மேற்கு வங்க மாநிலலம், டார்ஜிலிங் மாவட்டம் பனிகட்டாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மம்தா பானர்ஜி பேசியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என அவருக்கு (மோடி) தெரியும். எனவேதான் அவரது முகம் மங்கலாக மாறி உள்ளது. தேர்தல் தோல்வி என்ற அச்சத்தால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், ஆந்திரா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தோற்றுவிடுவோமோ என்ற சிந்தனையே அவரது மனதில் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறது. திரிபுரா பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப்போல மேற்கு வங்கத்திலும் இந்து-முஸ்லிம் இடையே பிரிவினையைத் தூண்டி வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில்தான் மாநிலம் முழுவதும் சுற்றி வருகிறார்.

நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால் பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பை மறந்துவிடாதீர்கள். இதை மனதில் வைத்து பாஜகவுக்கு வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close