[X] Close

ராகுல் மீது அவதூறு வழக்கு பிரிட்டனில் உள்ள லலித் மோடி ‘ட்வீட்’


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 10:58 am
  • அ+ அ-

திருடர்கள் எல்லாம் மோடி என்ற பெயரில் உள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்காக அவருக்கு எதிராக பிரிட்டனில் அவதூறு வழக்குத் தொடரப்போகிறேன் என ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “மோடி சமூகத்தினர் அனைவரும் திருடர்கள் என ராகுல் காந்தி கூறுகிறார். அவருக்கு எதிராக பிரிட்டனில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்துக்கு இழுக்கப் போகிறேன். ஆனால் உண்மையில் 50 ஆண்டுகளாக இந்தியாவில் பகல் கொள்ளையில் ஈடுபட்டது நேரு - காந்தி குடும்பத்தை தவிர வேறு யாருமில்லை என்பது இந்த உலகுக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி அண்மையில் மகாராஷ்டிராவில் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். அப்போது அவர், “நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரில் உள்ளனர்?” என்று கேள்வி எழுப்பினார். ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரப்போவதாக லலித் மோடிக்கு முன்னதாக, பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறினார்.

வரி மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக ஐபிஎல் நிறுவனரான லலித் மோடி, மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதற்கிடையில் கடந்த 2010-ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினார். கடந்த சில ஆண்டுகளாக அவர் லண்டனில் வசித்து வருகிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close