[X] Close

லக்னோ வேட்பாளர் தேர்வு உ.பி. காங்கிரஸார் அதிருப்தி


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 10:41 am
  • அ+ அ-

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணாம் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் வெளிமாவட்ட வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதால் கட்சித் தலைமை மீது காங்கிரஸார் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உத்தரபிரதேச தலைநகரான லக்னோவில் 2014-ல் போட்டியிட்டு வென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சமாஜ்வாதி சார்பில் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மனைவியான பூனம் சின்ஹா போட்டியிடுகிறார்.

சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் ஆகியவற்றுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. உ.பி.யில் தனித்து போட்டியிடும் காங்கிரஸ், லக்னோவில் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணாம் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

இவர் உ.பி.யின் சம்பல் தொகுதியில் ‘கல்கி தாம்’ என்ற ஆசிரமத்தின் தலைவராக உள்ளார். பிரமோத் கிருஷ்ணாம் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸார் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் லக்னோவின் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘இந்தமுறை லக்னோவை சேர்ந்தவரையே நிறுத்துவதாக பிரியங்கா உறுதி கூறி ஏமாற்றி விட்டார்.

மற்ற சில தொகுதிகளில் சமாஜ்வாதிக்கு ஆதரவு அளித்தது போல், லக்னோவிலும் பூனம் சின்ஹாவிற்கு காங்கிரஸ் ஆதரவளித்திருக்கலாம். பூனமை விட வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவரான பிரமோத் கிருஷ்ணாமுக்கு குறைந்த வாக்குகள் கிடைக்கும் நிலை உள்ளதால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம்’’ எனத் தெரிவித்தனர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close