[X] Close

மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா போட்டியா? - ராகுல் காந்தி சூசகம்


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 10:15 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா களமிறக்கப்படுவாரா என்ற கேள்விக்கு ராகுல் காந்தி சூசகமாக பதிலளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் எந்தக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதை தீர்மானிக்கும் மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இங்குள்ள வாரணாசி தொகுதியில்தான் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த முறையும் வாரணாசி தொகுதியிலேயே அவர் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவை அவர் வரும் 26-ம் தேதி தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்துகாங்கிரஸ் பொதுச் செயலாளர்பிரியங்கா காந்தி களமிறக்கப்படு வார் என பரவலாக ஊக கருத்துகள் வெளியாகி வருகின்றன.

மேலும், இந்த நோக்கத்துக் காகவே, பிரியங்கா காந்தி தனது பிரச்சாரத்தை வாரணாசியில் முடித்துக் கொண்டார் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு ராகுல்காந்தி நேற்று பேட்டியளித்தார். அப்போது, வாரணாசியில் பிரியங்கா காந்தி களமிறக்கப்படுவாரா? எனக் கேள்வியெழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘‘இதனை நான் மறுக்கவும் இல்லை; உறுதிப்படுத்தவும் இல்லை. உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்'' என சூசகமாக பதிலளித்தார்.

ராகுலின் இந்த பதிலால், பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிடுவது ஓரளவு உறுதியாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரியங்கா ஆலோசனை

இந்நிலையில் நேற்று காலை அமேதி நகரில் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் பிரியங்கா நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அமேதி தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தனது சகோதரருமான ராகுல் காந்தியின் வெற்றிக்காக தொண்டர்களும், நிர்வாகிகளும் தீவிரமாக உழைக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளைத் தவிரவேறு யாரையும் அனுமதிக்கவில்லை. முன்னதாக கவுரிகஞ்ச் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திலும் பிரியங்கா கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.

நிகழ்ச்சியின்போது சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.பாலச்சந்திர யாதவ், சமாஜ்வாதி நிர்வாகிவிஜய் பாசி, கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட சுவாமிநாத் யாதவ் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் பிரியங்கா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்ற பிரியங்கா, அனைவரும் அமேதிதொகுதியில் ராகுலின் வெற்றிக்காக பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அமேதி தொகுதியில் வரும் மே 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close