[X] Close

காங்கிரஸ், பகுஜன், சமாஜ்வாதிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது: ஆதித்யநாத்


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 10:09 am
  • அ+ அ-

-பிடிஐ

தேர்தல் நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 72 மணி நேரங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைப் போலவே பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மேனகா காந்தி ஆகியோர் 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

தடைக்காலம் முடிந்த நிலையில் சம்பல் பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 16 தொகுதிகளில் 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த 2 கட்ட வாக்குப்பதிவிலும் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ராம்பூரில் ஒரு ஜீவன் வாழ்கிறது (சமாஜ்வாதியின் தலைவர் ஆசம்கானின் பெயரைக் குறிப்பிடாமல் சொன்னார்). அவர் என்ன மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்றே தெரியவில்லை. பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர் பெயரை இழிவு செய்கிறார் அவர். தாய்மார்களையும், பெண்களையும் இழிவாகப் பேசும் அவருக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வாக்கு சேகரிக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close