[X] Close

யார் அவர்? குஜராத்தின் ஹிட்லரா?- ஹர்திக் படேலுக்கு ‘பளார்’ ஏன்? - அறைந்தவர் ஆவேசம்


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 15:05 pm
  • அ+ அ-

குஜராத் மாநிலம், சுரேந்தர் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தலைவரும், பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்த தலைவருமான ஹர்திக் படேலை திடீரென ஒருவர் கன்னத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் அறைந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது, இந்நிலையில் அறைந்தவரான தருண் குஜ்ஜார் தன் கோபத்துக்கான காரணம் என்ன என்பதை விளக்கினார்.

 

படேல் சமூகத்தின் முக்கியத் தலைவரான ஹர்திக் படேல் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து படேல்சமூகத்துக்கு இடஓதுக்கீடு கேட்டு குஜராத்தில் பல போராட்டங்களை நடத்தினார், பலர் போராட்டத்தில் உயிரழந்தனர், ஹர்திக் படேலும் சிறையில் தள்ளப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் ஹர்திக் படேல் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்து அந்த கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

இந்த அறை பரபரப்பாக மாற ருண் குஜ்ஜார், காங்கிரஸார் தாக்கியதாகக் கூறி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

 

அவர் ஊடகங்களுக்கு தருண் குஜ்ஜார் தன் பளாருக்கான காரணைத்தை விளக்கியபோது,

 

படேல் சமூகத்தினர் ஹர்திக் படேல் தலைமையில் வீதியில் இறங்கி போரட்டம் செய்த காலக்கட்டத்தில் என் மனைவி கர்ப்பமாக இருந்தார். மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது இவர்களின் போராட்டத்தினால் நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோ என்று ஒருவருக்கும் தெரியாது.  அப்போதே முடிவெடுத்தேன் ஹர்திக் படேலுக்கு ஒரு அறை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

 

அதேபோல், படேல்கள் ஊர்வலம் சென்ற தினத்தில் நான் என் குழந்தைக்கு மருந்து வாங்க முடியாமல் தவியாய் தவித்தேன், அனைத்துக் கடைகளும் இவரால் அடைக்கப்பட்டிருந்தன. 

 

அவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் கடையடைக்கச் சொல்வாரா? யார் அவர், குஜராத்தின் ஹிட்லரா?

 

என்று ஆவேசமாகப் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close