[X] Close

யோகி ஆதித்யநாத் விதிமீறல்: தேர்தல் ஆணையம் மீது மாயாவதி குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:49 am
  • அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உ.பி.யில் தேர்தல் பிரச்சாரத் தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடந்த செவ்வாய்கிழமை முதல் 72 மணி நேரம்பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. ஆனால், தடை விதிக்கப்பட்ட காலத்திலும் யோகி ஆதித்யநாத் கோயில்களுக்குச் செல்கிறார். தலித் மக்களின் வீடுகளுக்குச் சென்று சாப்பிடுகிறார்.

இதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இது தேர்தல் பிரச்சாரத்துக்கு சமமானது. யோகி ஆதித்யநாத் விதிமீறலில் ஈடுபடுகிறார். அவரிடம் தேர்தல் ஆணையம் இவ்வளவு தாராளமாக நடந்து கொள்வது ஏன்? தேர்தல் ஆணையம் இதேபோல தொடர்ந்து செயல்பட்டால் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடப்பது சாத்தியம் இல்லை.

இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மாயாவதிக்கும் கடந்த செவ்வாய்கிழமை காலை முதல் 48 மணிநேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதைஎதிர்த்து மாயாவதி தாக்கல் செய்தமனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close