[X] Close

‘காவலாளி திருடன்’ விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:19 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ‘காவலாளி திருடன்’ விளம்பரத்துக்கு ம.பி. மாநில தலைமை தேர்தல் அதிகாரி தடை விதித்துள்ளார். மேலும் அந்த விளம்பரத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ம.பி.யின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் இணை தலைமை தேர்தல் அதிகாரி நேற்று சுற்றறிக்கை அனுப்பினார். இதில் ‘காவலாளி திருடன்’ விளம்பரத்துக்கு ஊடக சான்றளிப்பு மற்றும் ஆய்வுக் குழு வழங்கியுள்ள அனுமதி ரத்து செய்யப்படுகிறது. எனவே இந்த விளம்பரம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த விளம்பரம் அவதூறு மற்றும் குற்றத்தன்மை கொண்டிருப்பதாக ம.பி. தலைமை தேர்தல் அதிகாரி வி.எல். காந்தராவிடம் பாஜகவினர் புகார் அளித்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பவும் அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close