[X] Close

இடைத்தரகர் மைக்கேலுக்கு ஜாமீன் மறுப்பு


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:02 am
  • அ+ அ-

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுவை நிராகரித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close