[X] Close

அவதூறு பிரச்சாரம்: கேரள பாஜக தலைவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 18:05 pm
  • அ+ அ-

-பிடிஐ

மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்கள் பற்றி தவறாக பேசியதாக கேரள பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதம், இனம், பிறந்த இடம், குடியிருப்புப் பகுதி, மொழி ஆகிய அடிப்படையில் இரு பிரிவினருக்கிடையே பகைமையைத் தூண்டியதாக இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ பிரிவின்மகீழும் 153ன் கீழும் கேரளா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வி.சிவன்குட்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அட்டிங்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஷோபா சுரேந்திரனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சரக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீதரன் பிள்ளை, ஏப்ரல் 14 அன்று இந்திய விமானப் படை நடத்திய பாலக்கோட் தாக்குதல் பற்றிய பேசியபோது, முஸ்லீம் சமூகத்தை அவமதிக்கும்விதமான கருத்துக்களைப் பேசியதாக புகாரில் சிவன்குட்டி தெரிவித்திருந்தார்.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்களுக்காக. கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்கா ராம் மீனா பாஜக மாநில தலைமைக்கு எதிராக "உரிய சரியான நடவடிக்கை"க்கு பரிந்துரை செய்துள்ளார்.

பாலகோட் விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரின் கருத்துக்களுக்கு பதிலளித்து பேசியபோது பிள்ளை இவ்வாறு பேசியுள்ளதாக மீனா குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வருமாறு:

''நம்முடைய ராகுல் காந்தி, யெச்சூரி, பினராயி ஆகியோர் அங்கு கிடைத்த பிறகு சொல்கிறார்கள். அந்த இறந்த உடல்கள்... என்ன சாதி, என்ன மதம், முஸ்லிமாக அவர்கள் இருந்தால் ஒரு சில அடையாளங்கள் அதில் இருக்கும். ஆடைகளை நீக்கிவிட்டு பார்த்தால் மட்டுமே அதைக் கண்டுபிடிக்க முடியும். எனவே, பிறகு எல்லாவற்றையும் செய்து நாம் திரும்பிவரவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்போல...'' இவ்வாறு கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பலர் முன்னிலையில் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

இக்கூட்டம் நடத்தப்பட எந்தவித முன்அனுமதியும் பெறப்படவில்லை என்பதையும் இதுகுறித்து திருவனந்தபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அட்டிங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இரு பிரிவினரிடையே பகைமைத் தூண்டுவதற்கான சட்டப்பிரிவு 123 (3ஏ)மற்றும் பிரிவு குடிமக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு(1951) 125, ஆகியவற்றின் விதிகளை மீறப்பட்ட வழக்கின் முதல்கட்ட ஆதாரங்களின்படி தெரியவந்துள்ளது.''

இவ்வறிக்கையை கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்கா ராம் மீனா, மத்திய துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயினுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், தலைமை தேர்தல் அதிகாரி மாநில உயர் நீதிமன்றத்திற்கும் இவ்வழக்கின்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளும்படி பரிந்துரைத்துள்ளார். 

பாஜக மாநிலத் தலைவர் பிள்ளை மீது நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிடும்படி ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் சிவன்குட்டி தாக்கல் செய்திருந்தார். எனினும் இம்மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close