[X] Close

கடமையைச் செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்டா?- மோடியின் ஹெலிகாப்டரில் என்ன இருந்தது?: காங்கிரஸ் கேள்வி


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 15:20 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை சஸ்பெண்ட் செய்த தேர்தல் ஆணைய நடவடிக்கை மீது காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றிருந்தார். அப்போது, பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டிருக்கிறதா என்பதை அறிய ஹெலிகாப்டரை தேர்தல் பார்வையாளர் முகமது மோசின் சோதனையிட்டார்.

 பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரை மீறி இந்த சோதனையை முகமது மோசின் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், போலீஸ் டிஐஜி ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் முகமது மோசின் குறித்து புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து தேர்தல் பார்வையாளர் முகமது மோசின் தேர்தல் ஆணையம் வகுத்த விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் பார்வையாளர் முகமது மோசின் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், " ஒரு அதிகாரி தனது கடமையைச் செய்யும் நோக்கில் வாகனத்தை சோதனையிட்டதற்காக தேர்தல் ஆணையத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு வாகனங்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த விதிகள் அனுமதிக்கிறதா? அப்படியிருக்கும்போது, சோதனை செய்வதில் பிரதமர் மோடியின் வாகனம் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. மோடி தனது ஹெலிகாப்டரில் என்ன எடுத்துச்சென்றார். மக்கள் பார்க்கக் கூடாது என்ற வகையில் என்ன கொண்டு சென்றார்?

அனைத்து தலைவர்களின் விமானங்களையும் சோதனை செய்வதற்கு பதிலாக, தங்களின் துறையில் உள்ள அதிகாரியையே தண்டிக்கிறது தேர்தல் ஆணையம். மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் இருந்து மர்மமான அந்த பெட்டி அகற்றப்பட்டபின், இந்திய தேர்தல் ஆணையம் இது குறித்து விசாரிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், சோதனையிட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ள செயல் ஒருதலைப்பட்சமானது " எனத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் ட்விட்டரில் கூறுகையில், " தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி, தற்போது உள்ள காங்கிரஸ் தலைவர், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர்கள், விமானங்களை சோதனையிட அனுமதிக்கிறது.

சிறப்பு பிரிவு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் வருபவர்களை சோதனையிட முடியாது என்று கூறமுடியாது. பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரி ஏன் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை ஏன் சோதனை செய்தார். அதிகாரியை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் என்ன செய்தியை கூற தேர்தல் ஆணையம் முயல்கிறது, சிலருக்கு சட்டம் சிறப்பு உரிமைகளை வழங்குகிறதா " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close