[X] Close

'நியாயத்துக்காக வாக்களியுங்கள்'-ராகுல் காந்தி; 'ஜனநாயகத்தை வலிமையாக்க ஓட்டளியுங்கள்': பிரதமர் மோடி


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 12:41 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

நியாயத்துக்காக வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஜனநாயக்கத்தை வலிமையாக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர மோடியும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்டவாக்குப்பதிவு இன்று நடக்கிறது. தமிழகம், கர்நாடகம், உ.பி, மேற்குவங்கம், மணிப்பூர், ஒடிசா, அசாம், ஆகிய மாநிலங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்கு பதிவு மையங்களில் நீண்டவரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், " அன்பார்ந்த இந்திய குடிமக்களே. மக்களவைத் தேர்தலில் 2-ம் கட்டவாக்குப்பதிவு இன்று நடக்கிறது. தங்களின் வேட்பாளர்களுக்காக வாக்களிக்கும் மக்களால் ஜனநாயகம் வலுப்படும் என்ற உறுதியாக நம்புகிறேன். இளைஞர்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களிப்பாளர்கள் என நம்புகிறேன் " எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் விடுத்துள்ள அறிக்கையில், " இன்று நீங்கள் வாக்களிக்கும் போது, நியாயத்துக்காக வாக்களிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேலையில்லாத இளைஞர்களுக்கான நியாயம், போராடும் விவசாயிகளுக்கான நியாயம், பணமதிப்பிழப்பால் தொழில்களை இழந்து தவிக்கும் சிறு, குறுவியாபாரிகளுக்கான நியாயம், சாதி, மதத்தை காரணம் காட்டி ஒதுக்கிவைக்கப் படுவர்களுக்காக நியாயம் கிடைக்க வாக்களியுங்கள் " எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ட்விட்டரில் கூறுகையில், " மக்களவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அனைத்து வாக்காளர்களும், குறிப்பாக இளம் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் ஜநாயகத்தில் பங்கேற்க வேண்டும். உங்களின் வாக்கு நாட்டின் பெருமைப்படுத்தும், வளர்ச்சிக்கு உதவும். நிலம்,நீர், வானம், விண்வெளி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் நம்முடைய புதிய இந்தியா புதிய உச்சத்தை அடைகிறது " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close