[X] Close

இந்தியாவில் 2 பிரதமர்களை பாஜக அனுமதிக்காது: பாஜக தலைவர் அமித்ஷா உறுதி


2

  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 10:58 am
  • அ+ அ-

இந்தியாவில் 2 பிரதமர்களை பாஜக அனுமதிக்காது என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

1953-ம் ஆண்டுக்கு முன் இருந்தது போல் காஷ்மீருக்கு தனி பிரதமர், குடியரசுத் தலைவர் கேட்டுப் பெறுவோம்” என்று தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா அண்மையில் கூறினார்.

இதற்கு கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் தாஸ்காவ் என்ற இடத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது:நம்மிடம் இருந்து காஷ்மீரை எவராலும் பிரிக்க முடியாது. பாஜக இருக்கும் வரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் இருக்கும். இந்தியாவில் 2 பிரதமர்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்க காங்கிரஸ் நினைக்கிறது.

இந்தியா, மகாராஜா சிவாஜியின் நிலம். இதன் பாதுகாப்பு நம் அனைவரின் பொறுப்பாகும். பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கி தோட்டா வந்தால் இந்தியா வெடிகுண்டை அனுப்பும். இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள் தேடிக் கண்டிபிடிக்கப்பட்டு கொல்லப்படுவார்கள்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close