[X] Close

95 மக்களவைத் தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு


95-2

  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 10:12 am
  • அ+ அ-

-Vilangiah

12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 91 தொகுதிகளுக்கான முதல் கட்டவாக்குப்பதிவு கடந்த 11-ம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 95 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

வாக்குப்பதிவின் போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸார், துணை ராணுவப் படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மொத்தம் 1,629 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 15 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். 1.81 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர ஒடிசா மாநிலத்தில உள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அங்குள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடக்கிறது.

தமிழக்தில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அவரின் மனைவி ஸ்ரீநிதி ரங்கராஜன், சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆகியோர் வாக்களித்தனர்.

chi.jpg 

புதுச்சேரியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் நின்று ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வாக்களித்தனர்.

மேற்கு வங்கத்தில் டார்ஜ்லிங், ராய்குஞ்ச்,ஜல்பைகுரி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணியில் இருந்து மக்கள் வாக்குப்பதிவு மையங்களில் ஆர்வத்துடன் நின்று வாக்களித்து வருகின்றனர்.

pudhu.jpg 

கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுகியில் 14 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 10 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கும், பிஹாரில் உள்ள 40 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கும் இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

kar.jpg 

பெங்களூரவில் இன்று காலை முதல் மக்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பெங்களூருவில் உள்ள ராமநகரா பகுதியில் முதல்வர் குமாரசாமி வாக்களித்தார்.  தும்கூருவில் உள்ள கோரட்டாகிரி நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் துணை முதல்வர் பரமேஸ்வரா, பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரில் உள்ள ஜெயநகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் காலையில் சென்று வாக்களித்தார்.

prakas.jpg 

சத்தீஸ்கரில் உள்ள 11 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

அசாம் மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது, மக்கள் நீண்டவரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த 5 தொகுதிகளிலும் 50 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

mani.jpg 

இதேபோல, மணிப்பூர் மாநிலத்தில் ஒரு தொகுதிக்கும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஸ்ரீநகர், உதம்பூர் ஆகிய 2 தொகுதிகளுக்கும் தேர்தல்வாக்குப்பதிவு தொடங்கியது. தீவிரவாதிகளால் எந்த விதமான இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்புபடையினர், தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வாக்குச் சாவடியில் சென்று முதல்வர் என். பிரேன் சிங் வாக்களித்தார். மேலும், மணிப்பூர் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவும் வாக்களித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close