[X] Close

‘அமைதி நேரத்தை’ பின்பற்ற வேண்டும்: ‘நமோ டிவி’-க்கு தேர்தல் ஆணையம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 09:55 am
  • அ+ அ-

ஒரு தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறும் தினத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 126-வது பிரிவின்படி, வாக்குப்பதிவு தினத்துக்கு 48 நேரத்துக்கு முன்பு சினிமா, தொலைக்காட்சி போன்றவற்றில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, ‘அமைதி நேரம்’ (சைலன்ட் பீரியட்) எனப்படுகிறது.

இந்த 48 நேரத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தால் தாக்கம் பெறாமல், வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என முடிவுசெய்ய, ‘அமைதி நேரம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடை பத்திரிகைகளுக்கு பொருந்தாது.

பாஜக சார்பில் செயல்படும் ‘நமோ டிவி’-யும் இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒளிப்பதிவு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் நமோ டிவி.யில் ஒளிபரப்புவதற்கு முன்னர், முன்கூட்டி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது. இதுகுறித்து, அறிக்கை அளிக்கும்படியும் தேர்தல் விதிகளை பின்பற்றுவதை கண்காணித்து உறுதிப்படுத்தவும் டெல்லி தலைமை அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close