[X] Close

ராமர் காலத்திலேயே டெக்னாலஜி இருந்தது: இதைச் சொன்னவர் பஞ்சாப் ஆளுநர்


after-biplab-deb-punjab-governor-cites-ramayana-to-highlight-indias-tech-prowess

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 May, 2018 14:19 pm
  • அ+ அ-

மகாபாரத காலத்தில் இணைய வசதியும் செயற்கைக்கோள்களும் இருந்தன என திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் கூறியதை மக்கள் மறப்பதற்குள் புராணத்தை தொழில்நுட்பத்துடன் இணைத்துப் பேசியிருக்கிறார் மற்றுமொரு பெரும் புள்ளி.

ஆம், இந்த முறை இப்படிப் பேசியவர் பஞ்சாப் மாநில ஆளுநர் வி.பி.சிங் பாட்னோர். 

மொஹாலியில் தேசிய மருந்தக படிப்பு மற்றும் ஆய்வு மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய அவர், "இந்தியாவில் மிகப் பழங்காலத்தில் இருந்தே தொழில்நுட்ப பயன்பாடு இருந்திருக்கிறது. ராமாயன காலத்தில் ராமர் இலங்கைக்கு செல்ல சேது பாலம் கட்டினார். கடலில் அவர் கட்டிய பாலம் தொழில்நுட்ப பயன்பாட்டுடனேயே நடந்தது. அந்த காலக்கட்டத்தில் அதிநவீன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன.

நமது தேசத்தின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயனமும், மகாபாரதமும் ஆதி காலத்திலேயே தொழில்நுட்பம் இருந்தது என்பதை பறைசாற்றுவதற்கான சாட்சியங்கள். இன்று இந்தியா தொழில்நுட்பத்துறையில் உயர்ந்து நிற்க இதுவே காரணம்" என்றார்.

எப்படி பிப்லப் குமார் தேப்பின் கருத்து விமர்சனத்துக்குள்ளானதோ அப்படித்தான் பஞ்சாப் ஆளுநரும் அவரது இந்தக் கருத்துக்காக சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close