[X] Close

ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகமுள்ள மல்காங்கிரியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது எப்படி?


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 08:04 am
  • அ+ அ-

மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒடிசா மாநிலம் மல்காங்கிரி தொகுதியில் அமைதி யான முறையில் வாக்குப்பதிவை நடத்தியது எப்படி என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஒடிசா மாநிலத்தில் மக் களவைத் தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அங்கு மொத் தம் 21 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. முதல் கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி 4 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு மிக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்த 4 தொகுதிகளில் மாவோயிஸ்ட் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மல்காங்கிரி தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மல்காங்கிரி தொகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் வாக்குப்பதிவை தேர்தல் அதிகாரிகளும், துணை ராணுவத்தினரும், போலீஸாரும் நடத்திக் காட்டியுள்ளனர். இது குறித்து மல்காங்கிரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஜக் மோகன் மீனா கூறியதாவது:

புலனாய்வுப் பிரிவினர் அவ்வப் போது கொடுத்த ரகசியத் தகவல், திட்டமிட்ட செயல்பாடு, போலீ ஸாரின் ஒத்துழைப்பு, தேர்தல் அதிகாரிகளின் சீரிய பணி ஆகியவற்றால் மல்காங்கிரியில் அமைதியான முறையில் வாக்குப் பதிவை நடத்தி முடித்துள்ளோம்.

வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத் துக்கு முன்பு மல்காங்கிரி தொகுதிக்குட்பட்ட தந்தகாரண்யா பகுதியில் மாவோயிஸ்ட் நட மாட்டம் இருப்பதாக தெரியவந் தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேர் இறந்ததால் நாங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டோம்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகள் முழு வதும் சல்லடையாக சலிக்கப்பட்டு அன்னியர்கள் நுழைய முடியாத படி கண்காணிப்பு அமைத்தோம். மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள், தேர்தல் நடத்தும் அலுவ லர்களை ஹெலிகாப்டர்களில் அழைத்துச் சென்று வாக்குச் சாவடியில் பணியமர்த்தினோம்.

இதனிடையே முடுலிபடா பகுதி யில் மாவோயிஸ்ட்கள் சதி வேலையில் ஈடுபடவிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து 6 வாக்குச்சாவடிகளை ஒன்றி ணைத்து ஒரே இடத்தில் வாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் வாக்குச்சாவடிகளுக்கு 2 நாட்களுக்கு முன்பாக போலீஸ், துணை ராணுவப் படையினர் சென்று முக்கிய இடங்களில் கண் காணிப்பை பலப்படுத்தினோம்.

தாக்குதலைத் தவிர்க்க முடு லிபடா பகுதியிலுள்ள வாக்குச் சாவடிக்கு ஏப்ரல் 10-ம் தேதி இரவு தேர்தல் அலுவலர்கள் செல்லுமாறு பார்த்துக்கொண்டோம்.

வாக்குப்பதிவு நடந்த அன்று முடுலிபடா வாக்குச்சாவடியைக் கைப்பற்றி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கடத்திச் செல்ல மாவோயிஸ்ட்கள் முயற்சி செய்வது தொடர்பான ரகசியத் தகவல் கிடைத்தது.

இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வழியிலும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக அறிந் தோம். இதையடுத்து மிகவும் எச்சரிக்கையுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்று வழியில் கொண்டு வரப்பட்டன. இதற்காக சாட்டிலைட் போன்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் கையாளப்பட்டன.

சில இடங்களில் தேர்தல் அதி காரிகள் பல கிலோமீட்டர் நடந்து வரவேண்டியிருந்தது. ஏப்ரல் 12-ம் தேதி காலை தேர்தல் அலுவலர்கள் பத்திரமாக, கைராபுட் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அனைவரது ஒத்துழைப்பினாலும் இந்த பணி யைச் செவ்வனே செய்து முடித் தோம். இவ்வாறு அவர் கூறினார்.

2014-ம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலின்போது மாவோ யிஸ்ட்கள், மல்காங்கிரி தொகுதிக்குட்பட்ட 15 வாக்குச் சாவடிகளைத் தாக்கி அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களை எடுத்துச் சென்று விட்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close