[X] Close

ஏமாற்றுவதில் பிஎச்.டி. பட்டம் பெற்ற காங்கிரஸ்- பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 07:54 am
  • அ+ அ-

மக்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் கட்சி பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒடிசாவின் சம்பல்பூர், சத்தீஸ்கரின் கோர்பா பகுதிகளில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். சம்பல்பூரில் அவர் பேசியதாவது:

ஒடிசாவில் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தரப்பில் 12 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிப் பொறுப் பேற்றால் 2022-ம் ஆண்டுக்குள் ஏழைகள், பழங்குடிகள் அனை வருக்கும் வீடு கட்டிக் கொடுக்கப் படும். புதிய வீட்டுக்கு இலவச காஸ் இணைப்பு, மின்சார வசதி, கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படும். விவசாயிகளுக் கான நிதியுதவி திட்டத்தில் ஒடி சாவில் 8.5 லட்சம் விவசாயி கள் மட்டுமே பயன்பெற்றுள்ள னர். இந்த திட்டத்தை செயல் படுத்துவதில் மாநில அரசு அக்கறைகாட்டவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள் ளனர்.

ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தள அரசு ஊழலில் திளைக்கிறது. ஒடிசாவுக்கு மத்திய அரசு ஒதுக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் 15 பைசா மட்டுமே மக்களை சென்றடைகிறது. 85 பைசா பல்வேறு கட்ட ஊழலில் கரைந்து விடுகிறது. இதேநிலை நீடித்தால் மாநிலம் எப்படி முன்னேறும்?

மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தை மக்கள் அகற்ற வேண்டும். மத்தியில் பாஜக தலைமையில் வலுவான அரசு அமைய மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

சத்தீஸ்கரில் பிரதமர் பேசும் போது “அண்மையில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி காங்கிரஸ் கட்சி ஆட் சியைப் பிடித்துள்ளது. மக்களை ஏமாற்றுவதில் அந்த கட்சி பிஎச்.டி. பட்டமே பெற்றுள்ளது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தேசவிரோத சட்டம் நீக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் தீவிரவாதம் பரவ காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.

ஆயுதப் படை சட்டம் வாபஸ் பெறப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதுகாப்புப் படைகளின் கைகள் கட்டப்படும். காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் நிலைமை மோசமடையும்.

காங்கிரஸ் ஆட்சியில் சத்தீஸ் கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கி வருகிறது. உங்களுக்கு (மக்கள்) கண்ணி வெடிகள் வேண்டுமா, இல்லை மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வேண்டுமா என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close