[X] Close

விரல்கள் பத்தும் மூலதனம்!


  • Posted: 01 Nov, 2013 20:49 pm
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்விஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர், செய்தியாளர்களிடம் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் கீழ், நமது நாடு மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது. எனவே, மோடி மற்றும் அமித் ஷாவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற நாங்கள் (ஆம் ஆத்மி) எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close