[X] Close

பொய்களை பரப்புகிறார் சரத் பவார்: பாஜக தலைவர் அமித் ஷா கடும் தாக்கு


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 08:58 am
  • அ+ அ-

தோல்வி பயம் காரணமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பொய்களை பரப்பி வருகிறார் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்ட்ராவில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியபோது, ரஃபேல் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாமலேயே பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை மனோகர் பாரிக்கர் ராஜினாமா செய்ததாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தமது ட்விட்டர் பக்கத்தில் அமித் ஷா நேற்று சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:மகாராஷ்ட்ராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலை அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும், அக்கட்சியில் குடும்பப் பூசல்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தோல்வி அடைவது உறுதியாகியுள்ளது.

இதனால் பதற்றமடைந்திருக்கும் சரத் பவார், பாஜகவுக்கு எதிராக பொய்களை பரப்பி வருகிறார். முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற முறையில் சரத் பவாரிடமிருநது தரமான கருத்துகள் வெளிப்படும் எனக் கருதினேன். ஆனால், இதுபோன்ற பொய்யுரைகளை அவர் கூறுவார் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு தனது பதிவில் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close