[X] Close

ராஜ் தாக்கரே, காங்கிரஸ் கட்சி பற்றி முதல்வர் பட்னாவிஸ் விமர்சனம்


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:23 am
  • அ+ அ-

மகாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணி, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

 மாநில கட்சியான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ள எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். இதன்மூலம் மறைமுகமாக காங்கிரஸுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று சிவசேனாவும் பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.

இந்தப் பின்னணியில் மாநில முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், நான்தேட் பகுதியில் நேற்று பேசியதாவது:காங்கிரஸ் மாநிலத் தலைவர் அசோக் சவாண் கடந்த சில ஆண்டுகளாக ராஜ் தாக்கரேவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தார். தற்போது அவர், ராஜ் தாக்கரேவை வாடகைக்கு எடுத்து பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத கூட்டணி தோல்வியை சந்திக்கும். ராஜ்தாக்கரேவின் அரசியல் வாழ்க்கைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close