[X] Close

தன் கிராமத்தின் அடிப்படை வசதிகளுக்காக பிரதமருக்குக் கடிதம் எழுதிய 10-ம் வகுப்பு மாணவி: 2 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாத அவலம்


10-2

  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 15:44 pm
  • அ+ அ-

-ஜி.டி.சதீஷ்

கர்நாடகாவில் முடிகெரே தாலுக்காவைச் சேர்ந்த அப்போது 10ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த ஜி.நமனா என்ற மாணவி தன் கிரமமான அலெகான் ஹொராட்டியில் அடிப்படை வசதிகளே இல்லை, நல்ல சாலை வேண்டும், குடிநீர், மின்வசதி,  சுகாதாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு 2016- ம்  ஆண்டு கடிதம் எழுதியிருந்தார்.

ஜி.நமனா என்ற இந்த மாணவி மொரார்ஜி தேசாய் ரெசிடென்சியல் பள்ளியில் படித்து வந்தார். இவரது கடிதத்தை அடுத்து பிரதமர் அலுவலகம் சிக்மகளூர் பஞ்சாயத்துக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பணித்தது. நமனாவின் தந்தை விவசாயி, தாயார் மருத்துவச் சமூகச் செயல்பாட்டாளர். பேருந்து வசதியில்லை, பேருந்து நிறுத்தத்திலிருந்து காட்டுப்பகுதி வழியே 5 கிமீ நடக்க வேண்டியுள்ளது. மின்சாரவசதி போதிய அளவில் இல்லை, சாலை வசதி இல்லை போன்றவற்றை வலியுறுத்தி இந்த மாணவி கன்னட மொழியில் கடிதம் எழுத அதனை இவரின் ஆசிரியர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அது பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டும் 2 ஆண்டுகள் எந்தப் பணிகளும் அங்கு நடைபெறவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில் நமனா பிரதமர் மோடிக்கு எழுதிய பிரச்சினைகள் தீர்ந்து விட்டதா என்று தி இந்து (ஆங்கிலம்) சிறப்புச் செய்தியாளர் அலெகான் ஹொராத்தி கிராமத்துக்குச் சென்ற போது  அலெகான் ஹொராத்தி கிராமம் முடிகெரே டவுனிலிருந்து 25 கிமீ தொலைவில் சார்மதி மலைப்பகுதியில் உள்ளது. புற உலகத்திலிருந்து இந்த இடம் தனித்து விட்டது.  8 ஆடி அகல குறுகலான பாதைதான் இந்தக் கிராமத்துக்குச் செல்லும் வழி. இருசக்கர வாகனங்கள் கூட சரளமாகப் போக முடியாது. முடிகெரே-மங்களூரு சாலையை அடைய 4கிமீ மலையேற்றப்பாதையில் நடந்துதான் வர வேண்டும். வொக்காலிகர்கள், மலேகுடியர்கள் ஆகிய பழங்குடிப் பிரிவினர் இங்கு வசித்து வருகின்றனர். 3 முதல் 8 ஏக்கர்கள் காபி எஸ்டேட் பகுதியாகும். மொத்தம் 35 வீடுகள் இங்கு உள்ளன.

12BGROAD.jpg 

இங்கு இருந்த அரசு முதன்மைப் பள்ளி கடந்த ஆண்டு மூடப்பட்டது. காரணம் மாணவர்கள் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது, இதனையடுத்து அருகில் இருக்கும் ஊர்களில் உள்ள தங்கிப்படிக்கும் பள்ளிகளுக்கு பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பி விடுகின்றனர். பிரதமரின் உத்தரவுக்கேற்ப நடமாடும் மருத்துவமனை இங்கு சனிக்கிழமை தோறும் வந்து போகும்.

இந்தக் கிராமத்துக்கு 11 கிமீ சாலைவசதிக்காக ரூ.10.8 கோடி மதிப்பிட்டு திட்டம் ஒன்றை முன் மொழிந்தது ஜில்லா பஞ்சாயத்து நிர்வாகம். ஆனால் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  இது மிகப்பெரிய தொகை, இதற்கு சிறப்பு நிதியுதவி தேவை, இப்பகுதிகளில் சுமார் 15 லட்சம் பேர் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களில் உள்ளனர், ஆனால் இவர்கள் இந்தத் திட்டத்துக்கான பணியை எடுத்துக் கொள்ளவில்லை.

மாணவி நமனாவின் தாயார் பவித்ரா கூறும்போது, “பிரதமர் தலையீட்டுக்குப் பிறகு சூழ்நிலை முன்னேறும் என்று எதிர்பார்த்தோம். ஏகப்பட்ட அதிகாரிகள் எங்கள் கிராமத்துக்கு வருவதும் போவதுமாக இருந்தனர், ஆனால் இப்போது பாருங்கள் ஒருவரும் வருவதில்லை, சாலையைப் பாருங்கள் 2 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியேதான் உள்ளது” என்றார் வேதனையுடன்.

இந்தக் கிராமத்தில் செல்போன் சிக்னல்கள் லேசில் கிடைக்காது, மேற்கூரையிலிருந்து பிளாஸ்டிக் பையில் செல்போன்கள் தொங்கும், அப்போதுதான் சிக்னல் கிடைக்கும்.  பி.எஸ்.என்.எல். தன் தரைவழி நெட்வொர்க் சேவைகளை மேம்படுத்தவில்லை என்பதால் பலரும் லேண்ட் லைன் சேவையைத் துறந்து விட்டனர்.

12BGPHONE.jpg 

“ரெசிடென்ஷியல் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் நாங்கள் சிக்னல்  இல்லாததால் பேச முடியாது, கனெக்டிவிட்டி படுமோசம்” என்கிறார் அங்கு வசிக்கும் ஒருவர்.  மாணவி நமனா தன் கடிதத்தில் நெட்வொர்க் விவகாரத்தையும் பிரதமருக்குத் தெரிவித்திருந்தார், ஆனால் அதுவும் சரிசெய்யப்படவில்லை.

பலரும் சிக்னல்களுக்காக போனை வீட்டுக்கு வெளியே வைத்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close