[X] Close

சூர்யா - இஷான்: கேரளாவின் முதல் திருநங்கை - திருநம்பி தம்பதி


surya-and-ishaan-create-history-as-the-first-transsexual-couple-in-kerala-to-get-married

  • kamadenu
  • Posted: 10 May, 2018 15:17 pm
  • அ+ அ-

கேரள மாநிலத்தில் சூர்யா என்ற திருநங்கையும் இஷான் என்ற திருநம்பியும் திருமணம் செய்து கொண்ட வரலாற்று நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இருவீட்டார் சம்மதத்துடன் உற்றார், உறவினர், நண்பர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ள இந்தத் திருமணம் வெகு விமரிசையாக நடந்துள்ளது. இந்தத் திருமணமானது சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் நடத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2000-ம் ஆண்டுதான் சூர்யா தனது கட்டுகளை உடைத்துக் கொண்டு திருநங்கை ஆனார். பின்னர், மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகளை நிலைநாட்டுவதற்கான செயற்பாட்டாளர் ஆனார். கூடவே நடிப்புத் தொழிலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இதேபோல், இஷான் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர். அவர் தன்னை திருநம்பியாக அடையாளப்படுத்திக் கொள்ள மிகுந்த சிரமப்பட்டார். ஆனால், இருவரையும் அவரவர் குடும்பத்தினர் ஆதரித்தர். இதன் காரணமாக அவர்களால் சுதந்திரமாக தாங்கள் விரும்பும் பாலினத்துக்கு மாற இயன்றது. இப்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

கேரளாவில் இப்படியான திருமணம் நடப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close