[X] Close

ஃபோர்ப்ஸ் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம் பிடித்த மோடி, அம்பானி 


narendra-modi-among-top-10-most-powerful-people-in-the-world-forbes

  • kamadenu
  • Posted: 09 May, 2018 14:24 pm
  • அ+ அ-

ஃபோப்ர்ஸ் பத்திரிகை 2018-ம் ஆண்டுக்கான உலகின் 75 சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் இடம்பெற்றுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பின்னுக்குத் தள்ளி சீன அதிபர் ஜி ஜின்பிங் முதலிடத்துக்கு வந்துள்ளார். உலகின் முதல் சக்தி வாய்ந்த நபராக ஜி ஜின்பிங் உருவெடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 9-வது இடத்தில் உள்ளார். மார்க் சூக்கர்பர்க் 13-வது இடத்திலும், பிரிட்டன் பிரதமர் தெரசா மே 14-வது இடத்திலும், சீனப் பிரதமர் லீ கெக்கியாங் 15-வது இடத்திலும் உள்ளனர். இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் 32-வது இடத்தில் இருக்கிறார்.

மோடி குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை, "உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட 2-வது நாட்டில் மோடி மிகப் பிரபலமாக இருக்கிறார். ஊழல், கருப்புப் பண ஒழிப்புக்காக மோடி மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை சுட்டிக்காட்டியதோடு மோடி பருவநிலை மாற்றத்தை தடுக்கும் சர்வதேச முயற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறார்" எனத் தெரிவித்துள்ளது.

அதேபோல், அம்பானி குறித்து "2016-ல் ஜியோ ஃபோனை அறிமுகப்படுத்தியதன் மூலம் முகேஷ் அம்பானி, அதிகப் போட்டியுள்ள தொலைதொடர்புத் துறையில் முத்திரை பதித்திருக்கிறார். 160 மில்லியன் வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது. குறைந்த செலவில் இணைய பயன்பாட்டை மக்களுக்கு சாத்தியமாக்கியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close