[X] Close

ரயில்வே சமையலறைகளைக் கண்காணிக்க ஓர் அந்நியன்


cameras-with-artificial-intelligence-to-monitor-railway-kitchens

  • kamadenu
  • Posted: 08 May, 2018 14:30 pm
  • அ+ அ-

அந்நியன் திரைப்படத்தில் வரும் ரயில் காட்சி மறக்கமுடியாதது. காரணம், ரயிலில் பயணம் செய்தபோது நம்மில் பெரும்பாலானோருக்கு ஏதோ ஒரு தருணத்தில் அத்தகைய தரமற்ற உணவு வழங்கப்பட்டிருக்கும். 

பொதுமக்கள் எல்லாம் தரமற்ற உணவு குறித்து குறை கூறி வெறுத்துப்போன நிலையில்தான் சில மாதங்களுக்கு முன் கேக் (CAG) எனப்படும் நாட்டின் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஓர் அதிர்ச்சிகரமான கருத்தைத் தெரிவித்தார். ரயில்வே நிர்வாகம் வழங்கும் உணவு மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்றதாக இருக்கிறது என அவர் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் தனக்குச் சொந்தமான 16 சமையற்கூடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களைப் பொருத்தியிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு கேமரா வசதியால் என்ன பயன்?
சரி, செயற்கை நுண்ணறிவு கேமரா வசதியால் என்ன பயன் எனக் கேட்கிறீர்களா? இந்தக் கேமராக்கள் மூலம் சமயற்கூடங்கள் சுத்தமாக இருக்கின்றனவா? எலி, கரப்பான் பூச்சிகளின் நடமாட்டம் இருக்கின்றனவா? சமையலைச் செய்பவர்கள் நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றனரா? போன்றவற்றை கண்காணிக்க முடியும்.
ஒருவேளை சமையலறையில் எலி திரிந்தால். இந்தக் கேமரா அந்த இடத்தை சிவப்பு மை வட்டத்துக்குள் காட்டும். அதேபோல், சமையல் நிபுணர் தலையில் அணிய வேண்டிய தொப்பி அணியவில்லை என்றாலோ அவர் சீருடைய அணியவில்லை என்றாலோ கேமரா பதிவுகளை லைவ் ஸ்ட்ரீமிங்கில் கண்காணிக்கும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சமையலறைக்கு தகவல் தருவார்கள்.

இவற்றை கண்காணிக்க மத்திய கட்டுப்பாட்டு அறை ஒன்று டெல்லியில் அமைக்கப்படுகிறது. சமையலறைகள் எப்படிக் கண்காணிக்கப்படும் எனக் கூறியுள்ள நிலையில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என ரயில்வே நிர்வாகம்  குறிப்பிடவில்லை.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close