[X] Close

ஆளுநர் கல்யாண் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 08:01 am
  • அ+ அ-

"நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்" என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் அண்மையில் கூறினார். ஆளுநராக பணியாற்றும்போது பாஜகவுக்கு ஆதரவாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதிஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை காங்கிரஸ் அளித்துள்ளது” என்று விமர்சித்தார். இதுகுறித்தும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

இதையடுத்து கல்யாண் சிங், ராஜீவ் குமார் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், "தேர்தல் நடத்தை விதிகளை மீறிய ஆளுநர் கல்யாண் சிங்கும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமாரும் பதவியில் நீடிக்க எவ்வித உரிமையும் இல்லை. அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close