[X] Close

‘‘தேர்தலில் போட்டியில்லை; இந்தூர் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யட்டும்’’ - சுமித்திர மகாஜன் அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 16:13 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, இந்தூர் தொகுதியின் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்து கொள்ளலாம் என சபாநாயகர் சுமித்திர மகாஜன் அறிவித்துள்ளார்.

75 வயது தாண்டிய கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அமைச் சரவையில் வாய்ப்பளிக்காத பாஜக இந்தமுறை, தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக, முன்னாள் துணைப் பிரதமரான எல்.கே.அத்வானிக்கு (91) பதிலாக குஜராத்தின் காந்திநகரில் அமித்ஷா போட்டியிடுகிறார். அதேபோல், கான்பூரின் எம்பி.யான முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிக்கு (85) பதிலாக உபி அமைச்சரான சத்யதேவ் பச்சோரிக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

இதன் மீது அறிக்கை வெளியிட்ட ஜோஷி, தன்னை போட்டியிட வேண்டாம் என பாஜக நிர்வாகிகள் வற்புறுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இதுபோலவே, கல்ராஜ் மிஸ்ரா இந்த முறை தான் போட்டியிடப்போவதில்லை என என முன்கூட்டியே அறிவித்து விட்டார்.

இந்தவரிசையில், மக்களவை யின் சபாநாயகரான சுமித்ரா மகாஜனுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. போட்டியில் இருந்து விலகும்படி வலியுறுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. எனினும் இந்தூர் தொகுதிக்கு வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close